14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!
|Friday,, 05th August 2022|Crime|
Page Views: 1
|
|
மன்னார்-வெலிப்பாறை பகுதியில் சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு தொகை கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தம்மென்னா மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
20 பொதிகளில் சூட்சுமமான முறையில் பொதியிடப்பட்டிருந்த 49 கிலோ 380 கிராம் கேரள கஞ்சா தொகை இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கேரள கஞ்சா தொகை தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
|
|