head


முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறக்க கூடாது: முதல்வர் ஸ்டாலின்!

|Friday, 05th August 2022|| Page Views: 1

போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கனமழை பெய்துவரும் 14 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். அதில், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது. இரவு நேரத்தில் தண்ணீர் அளவை வெளியேற்றத்தை அதிகப்படுத்துவதை தடுக்க வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களையும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்திட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும். உடனடியாக அவற்றை சேமிப்பு கிடங்குகளில் மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.