head


ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்ட 20 உள்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் தொடர இந்தியா விருப்பம்!

|2022-12-02 11:54:22|Political| Page Views: 216

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து குண்டுவெடிப்புகளும் வன்முறைகளும் வழக்கமான ஒன்றாகிவிட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை இந்தியா மீண்டும் தொடர இருப்பதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதையடுத்து பாதுகாப்பு கருதி, இந்திய தூதரகத்திலிருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு தடைபட்டது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே தூதரக உறவு மீண்டும் தொடங்கியது.

இதனையடுத்து பாதியில் நிறுத்திய உள்கட்டமைப்புத் திட்டங்களை இந்தியா மீண்டும் தொடரும் என்று ஆப்கான் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்தது.20 கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடர இந்தியா விரும்பம் தெரிவித்துள்ளது என்று தலிபான் அரசு அறிவித்துள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.