head


முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதியும் நீதவானுமான டி. திரு.சரவணராஜாவின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது வேறு எந்த அச்சுறுத்தலோ இல்லை !

|2023-10-13 08:48:23|General| Page Views: 212

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதியும் நீதவானுமான டி. திரு.சரவணராஜாவின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது வேறு எந்த அச்சுறுத்தலோ இல்லை என்பதும், அவர் தனது மனைவிக்குக் கூட தெரிவிக்காமல் வெளிநாடு சென்றுவிட்டார் என்பதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்காக வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 24ஆம் திகதி வெளிநாடு சென்றமை சில திட்டமிட்ட குழுவின் திட்டமா , என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நீதவான் ஒருபோதும் பொலிஸாரிடமோ அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிலோ முறைப்பாடு செய்யாத நிலையில், செப்டம்பர் 23ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்ததோடு நீதவான் கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளார்.

நீதிபதியின் மனைவி, முல்லைத்தீவு மேலதிக நீதவான் டி.பிரதீபன், முல்லைத்தீவுப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.யூ.பி. அமரதுங்க, முல்லைத்தீவு பதில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஜி.எச். என்.கே.திலகரத்ன, மாவட்ட நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொலிஸ் கான்ஸ்டபிள் கே. பிரேமன், தனிப் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள் கே.சிவகாந்தன், முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு பொறுப்பான பொலிஸ் கான்ஸ்டபிள் எம். முடிசன், பொலிஸ் கான்ஸ்டபிள்களான சமரகோன் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் சண்டருவன், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றப் பதிவாளர் பி. சரவணராஜ், நீதிபதியின் நீதித்துறை வழக்கறிஞராகப் பணியாற்றிய பி. சுசிகன், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பிஸ்கல் எஸ். சிவகுமார், முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஜே..லிண்டன்ராஜா ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வாக்குமூலங்களின்படி உயிர் அச்சுறுத்தல் தனக்கு இருப்பதாக நீதிபதி டீ. சரவணராஜா ஒருபோதும் அவர்களிடம் கூறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அந்த அறிக்கையின்படி முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி டி. திரு.சரவணராஜா முல்லைத்தீவு நீதவானாக ஏப்ரல் 05, 2021 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்கு அனைத்து பாதுகாப்பையும் வழங்கியுள்ளது. எந்த நேரத்திலும் பாதுகாப்பு அல்லது உயிருக்கு ஆபத்தான பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை இந்த உண்மைகளின்படி, நீதவானின் வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.