head


காசாவில் வைத்தியசாலை மீது இஸ்ரேல் படை தாக்குதல் !

|2023-11-21 10:26:12|General| Page Views: 91

வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சு வெளியிட்ட ஒரு அறிக்கையில்,

ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் உயிர்கள் "இந்தோனேசிய மருத்துவமனையின் நேரடி மற்றும் தொடர்ச்சியான குண்டுவெடிப்பின் விளைவாக மரண அபாயத்தில் உள்ளன" என்று எச்சரித்தது.

உத்தியோகபூர்வ பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான WAFA இன் தகவலின்படி, இந்த மருத்துவமனைக்குள் 150 நோயாளிகள், 100 மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அல் ஷிபா மருத்துவமனைனையை விட்டு அனைவரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றிய இஸ்ரேல் இராணுவம் தற்போது மற்றுமொரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.