இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நேற்று (20) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் 40 மீனவர்களின் படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
படகுகளில் இருந்த எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதம்
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு துறையினர் தீ விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு தீயை அணைத்துள்ளனர்.
இதேவேளை தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விாசரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.