head


தலைமை மாற்றமும் தாயகத்தின் தலைவிதியும் ?

|2024-01-22 09:46:13|Political| Page Views: 388

தமிழ் அரசியல் எதை நோக்கி பயணிக்கின்றது என்பதை தற்காலத்தில் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிராகவே இருக்கின்றது. தங்களுக்கு தலைமை தாங்க கூடியவர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சிலரின் தெரிவு எவ்வாறு முழு தமிழ் மக்களின் தெரிவாக இருக்க முடியும்.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்டாலும் அவர் நிச்சயமாக ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் இருக்க வேண்டும் அல்லவா? எமது தமிழ் அரசியலிலோ இவை அனைத்துமே தலைகீழாகவே இடம் பெற்று வருகின்றது.

இப்பிரபல அரசியல் தலைவரானவர் எப்பொழுதுமே பயங்கரவாத கொள்கை உடையவராக இருக்கின்றார்.இவ்வரசியல்வாதி பதவிக்கு வருவதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.அதிகாரத்தை கைப்பற்ற கொலை செய்வதற்கு கூட அஞ்சமாட்டார் எனவும் ஒரு சாரார் கூறிவருகின்றனர்.

ஏனெனில் முன்னைய காலத்தில் ஆவா குழுவினரையும் வாள்வெட்டு குழுக்களையும் வைத்து பல்வேறு நாசகர செயற்பாடுகளை முன்னெடுத்தவர் மட்டுமில்லாமல் பயங்கரவாத கொள்கையுடைய இவர் போன்றவர்கள் எமது தமிழீழ மக்களை மீண்டும் படுகுழியில் தள்ள முயற்சிப்பார்.

யுத்தம் நடந்த போது எமது தமிழீழ மக்களுக்காக எதையுமே செய்யவில்லை.ஆனால் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளின் பெயரை பயன்படுத்தி தற்போது அரசியல் செய்து வருகின்றார். வெற்றியீட்டிய பின்னர் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்றமை கூட வெறும் அரசியல் கண்துடைப்பே ஆகும்.

இவரது பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவங்களில் கூட இவருக்கு சம்பந்தம் இருப்பதாக பலமுறை தகவல்கள் வெளியாகிமை குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்னர் அவரது உதவியாளர் ஒருவர் ஆபாச படங்கள் அடங்கிய இறுவட்டுக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகியிருந்தமை நாம் அறிந்ததே.

உண்மையில் இவரெல்லாம் தமிழர் தாயக மண்வாசனை கூட அறியாதவர். எமது தாயக மக்களுக்காக போராட போகிறாராம் . ஆனால் தாயகம் வருவதென்றால் ஆடி காரில் ஆயுத படைகளோடு தான் வருகிறார் இவர்.சொந்த மக்களை நம்பாதவர் ..சொந்த மக்களுக்காக போராட போகிறாராம்.

இனவாத கருத்துக்களை மாத்திரம் நாடாளுமன்றில் பேசிவரும் இவர் எவ்வாறு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகிறார்.மத்த அரசியல்வாதிகளை போல காலத்தை கழித்து விட்டு போய்விடுவாரே தவிர மக்களுக்காக எதையும் செய்யப்போவதில்லை. ஆனால் புலம்பெயர் மக்களிடம் பணம் பெறுவதற்காக மாத்திரம் சில போலியான செயற்பாடுகளை முன்னெடுக்க வாய்ப்பு உள்ளது.

சர்வதேச அமைப்புகளின் ராஜதந்திரிகளிடம் கூட சரியான தொடர்பு இல்லாத ஒருவர் தலைமை பதவிக்கு வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு சர்வதேச ரீதியில் கொண்டு செல்வார்? தாயகத்தின் தலைவிதியை எதிர்காலத்தில் மாற்ற முயற்சிப்பாரா , கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை இனிவரும் காலங்களில் நிறைவேற்றுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.