இந்து சமுத்திர பிராந்தியத்தில் தற்போது இடம் பெற்றுவரும் சில சம்பவங்கள் ஆசிய பிராந்தியத்தில் சில அரசியல் சலசலப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
முதலாவது விடயம் இந்திய சீன மோதலில் மாலைதீவு இலங்கை போன்ற நாடுகளை தங்கள் வசமாக்குவது எவ்வாறு என்பதில் போட்டித் தன்மை விளங்குகின்றது.
மாலைதீவு இந்திய முருகலில் மாலைத்தீவு முழுமையாக சீனாவின் பக்கம் திரும்பி உள்ள நிலையில் இந்திய ராணுவத்தை மாலை தீவில் இருந்து முழுமையாக வெளியேறுமாறு மாலைத்தீவு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் மார்ச் 15க்குள் இந்தியா மாலைதீவிலிருந்து தங்கள் ராணுவத்தை முழுமையாக அழைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து இந்தியாவின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கான படிப்படியான நகர்வுகளை இந்தியா முன்னெடுத்து வருகின்றது.
உண்மையில் எமது வடகிழக்கில் நடைபெறும் ஒரு சில நிகழ்வுகள் எமது தாயகம் இந்தியாவின் கட்டுக்குள் வருவதற்கான நகர்வுகளை வெளிப்படுத்துவதாகவே உள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டம் இந்தியாவின் பிரகடனப்படுத்தப்படாத ஒரு மாநிலமாக மாறிவுள்ளதாகவும் அதற்கு அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் நிகழ்வுகள் எடுத்துக்காட்டு எனவும் பிரத்தானியர் இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தியா முழு வடகிழக்கையும் மேலும் கொழும்பையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ் வருகையிலும் மறைமுக அரசியல் உள்நோக்கமொன்று இருப்பதாக ஒருசிலர் தெரிவித்து வருகின்றநிலையில் மாவீரர் தின மாதத்தில் இந்திய பின்னணி பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தமையும் இந்தியாவின் சூழ்ச்சியே என கூறப்படுகின்றது.
செங்கடலில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக பல்வேறு நாடுகளின் கப்பல்களும் இலங்கையின் துறைமுகங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில் இந்தியாவின் பாதுகாப்பினை கருதி இந்தியா இதனை சற்று தீவிரமாக அணுகவும் வாய்ப்புள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் சீனாவிடம் மண்டியிட இந்தியா விரும்பவில்லை. தனது செல்வாக்கினை தெற்காசியாவிலும் சரி ஆசிய பிராந்தியத்திலும் சரி நிலை நாட்டவே இந்தியா வரும்புகின்றது. தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள இந்தியா எதனையும் செய்ய தயாராக இருக்கின்றது. அனுமதி வழங்க மறுப்பின் இந்தியா படைத்துறை ரீதியாக கைப்பற்றும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்தியா அவ்வளவு பலம் பொருந்தியது.
இந்திய அமைதிப்படைக்காலம் மீண்டும் வருவதை எம்மால் கனவில் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அது எத்தகைய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எமது தமிழ் மக்கள் நன்கறிவர்.
இதனைப் பற்றி நமது தமிழ் அரசியல் தமிழ் தலைமைகள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. கவனத்தில் கொள்வதாகவும் தெரியவில்லை. ஒரு சிலர் இவ்விடயங்களுக்கு துணை நிற்பதாகவே தென்படுகின்றது.மேலும் அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல் கடந்த கால யுத்த கதைகளையும் இன பிரிவினைவாதத்தையும் கூறி அரசியல் செய்துவரும் இவர்களின் பிடியில் தான் எமது தமிழீழம் சிக்கியுள்ளது. தலைமைகள் மாறுவதால் எமது தலையெழுத்தொன்றும் மாறப்போவதில்லை.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.