head


பதவி வேட்கையில் பிளவுப்படுகிறதா தமிழ் தேசியம் ?

|2024-01-31 11:18:15|General| Page Views: 818

இலங்கையின் 73 வருட கால பழைமையான தமிழ் கட்சி ஒன்றில் தற்போது பதவிக்கான போட்டியின் காரணமாக பிளவு ஏற்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களை ஜனநாயகவாதிகள் என காட்டிக்கொண்டு உள்ளுக்குள் சிறு பிள்ளைத்தனமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இவர்கள்தான் நாளைய தமிழ் இனத்தை கட்டியெழுப்ப போகும் காவலர்களா?

தலைமை மாற்றம் நடந்ததில் பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக கூறிவரும் நிலையில் தற்போது பொதுச் செயலாளர் தெரிவில் கைகலப்பு ஏற்பட்டு தீர்க்க முடியாத பட்சத்தில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் அளவிற்கு பிரச்சினை சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்த தலைமை அமைய பெற்றிருந்தால் இத்தகைய குழப்பகர சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். தலைமை பதவி ஏற்பவர்கள் பயங்கரவாத சிந்தனையுடன் செயற்படும்போது கட்சிக்குள் ஒற்றுமை என்பது ஒருபோதும் இருக்காது . தங்கள் கட்சிக்குள் செயலாளர் ஒருவரை தெரிவு செய்து கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு ஜனாதிபதி பொது வேட்பாளராக எம்மில் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்.

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய தலைமை தனது கைப்பபிள்ளையாக செயற்படக்கூடிய ஒருவரை பொதுச்செயலாளராக கொண்டு வந்து ,தான் விரும்பிய வகையில் காய் நகர்த்தலாம் என என திட்டமிட்டு இருந்தார் இருப்பினும் கட்சியின் மரபுகளை மீற முடியாது என ஏனைய உறுப்பினர்கள் அதனை புறக்கணித்துள்ளனர். அவர்கள் நல்லதொரு அனுபவமுடைய பக்கசார்பற்ற ஒருவரை தெரிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியமையால் ஏற்பட்ட கருத்துமோதலில் வார்த்தைகள் எல்லை மீறியதனை தொடர்ந்தே கைகலப்பு ஏற்பட்டு பொலிஸ் நிலையம் வரை சென்று தலைகுனியும் படி ஆகிவிட்டது.

மூத்த கட்சி ஒன்றில் இவ்வாறு குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டு இரண்டாக பிளவு பட்டிருப்பது அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இது பெரும்பாலும் எதிர்பார்த்த ஒன்றே. ஏனெனில் இவர்கள் ஒன்றும் தாயக மக்களின் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பயணிப்பவர்கள் அல்லவே .தங்களுடைய குறுகிய கால நோக்கங்களுக்காகவும் தங்களது சுயலாபங்களுக்காகவும் கட்சியில் இணைந்த இவர்களிடம் நாம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்?

இவற்றில் இருந்து மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான் .இவர்களின் சுயரூபம் என்ன என்பது .வெறும் பதவிக்காக இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் இவர்கள்தான் எமது இனத்திற்கான விடுதலையை பெற்றுக் கொடுக்கப் போகின்றார்களா?

இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத போது இவர்கள் இவ்வாறு மக்களிடத்தில் ஒற்றுமையை கட்டி எழுப்ப போகிறார்கள் . ஹர்த்தால் அனுஸ்டிப்பதும் கறுப்பு நாள் அனுஸ்டிப்பதும் தான் இவர்களின் ஆகப்பெரிய சாதனை எனலாம். இதனை தாண்டி எம் மக்களுக்காக என்ன செய்து விட்டார்கள்?

இவர்கள் எந்நேரமும் தென்னிலங்கை அரசியல்வாதிகளை நோக்கி கள்வர்கள் என கை காட்டுவார்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இவர்களும் அவர்களைப் போன்ற கள்வர்களே. சரியான தலைமையே ஒரு கட்சியை சரியாக வழி நடத்தும் .அதற்குள் பிளவுகள் ஏற்படுத்தாது அதனை முன்னோக்கி நகர்த்தும்.அதாவது தலைமை என்பவர் கட்சியின் அனைத்து விடயங்களையும் ஆக்கப்பூர்வமாகவும் சட்டரீதியாகவும் அணுகி ஆராய கூடியவராக இருத்தல் வேண்டும். ஆனால் எனக்கென்னமோ மூத்த கட்சியானது ஜனநாயக ரீதியில் செயற்பட்டு நல்லதொரு தலைமையை இனங்கான தவறிவிட்டது என்றே கூறத் தோன்றுகிறது.

அண்மையில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத்தின் பொது கூட்டத்தில் இவ்வாறு தான் பதவிக்காகவும் புலம்பெயர் பணத்திற்காகவும் ஒரு சண்டை ஏற்பட்டது. தற்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய மூத்த அரசியல் கட்சியில் இவ்வாறான பதவிக்கான சண்டை ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள் எவருமே உண்மையாக மக்களுக்காக போராடுவதற்காக வரவில்லை இவர்கள் அனைவரும் பதவி வேட்கையிலேயே தங்களை மக்களின் பிரதிநிதிகளாக காட்டிக்கொள்ள முற்படுகின்றனர்.

மக்களாகிய நாம் இவர்களை பற்றி சரியாக விளங்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எமக்கான இலக்குகளை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். இத்தகைய அரசியல் கள்வர்களை நம்பி நிற்பதில் பயன் இல்லை.Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.