head
Join Us


76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாயக கோவில்களில் சிறப்பு சமய வழிபாடுகள்.

|2024-02-04 12:23:23|General| Page Views: 389

நமது தாய் நாட்டின் 76ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஆசீர்வாதங்களை வேண்டி இன்றைய தினம்(04.02.2024) மதியம் வடகிழக்கின் பல்வேறு கோவில்களில் சுதந்திர தின சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளன.

அந்த வகையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் குருக்கள் கயன் சர்மா மற்றும் கிளிநொச்சி முருகண்டிப் பிள்ளையார் கோவில் தலைமை குருக்கள் பால்ராஜ் மற்றும் முல்லைத்தீவு காளி கோவில் தலைமை அர்ச்சகர் சர்மா குருக்கள் வற்றாப்பளை ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் கோவில் தலைமை குருக்கள் சங்கர் அவர்கள் கோப்பாபுலவு காளியம்மன் கோவில் தலைமை குருக்கள் சுவாமி குருநாதன் என்போர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் நாட்டின் நலனுக்காகவும் சாதி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதற்கும் சிறந்த முன்னுதாரணமாக இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் பல்வேறு சிவில் அமைப்புகளும் மற்றும் தமி அரசியல் பிரதிநிதிகளும் தங்கள் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொதுமக்களின் உண்மையான சுதந்திரத்தை தடுக்கும் பல்வேறு போராட்டங்கள் எதிர்ப்பு பேரணிகள் மற்றும் நடைபயணங்கள் மேற்கொள்ளவும் இன்றைய சுதந்திர தினத்தை (04.02.2024 ) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் கறுப்பு நாளாக அறிவித்துள்ள நிலையில் மேற்படி முன்னுதாரண சமய வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு இந்து சமய ஆலயங்களை மையப்படுத்தி இன்றையதினம் சுதந்திர தின சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தியுள்ளமை காலத்திற்கு ஏற்ற செயற்பாடுகளாக கருதலாம்.

அரசாங்கத்தை எதிர்த்து தேசிய பாதுகாப்பில் ,அச்சுறுத்தலாக செயற்படும் செலுத்தும் பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் அறிவித்து தமிழ் சமூகத்தின் வாழ்வை அழித்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் தேசிய சுதந்திர தினத்தை நிராகரித்து மக்களை அழிக்க முயலும் சகல தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இச்சமய வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்கள் சமூக மயப்படுத்துவதற்கு காலத்திற்குரியது என்பதை சுட்டிக்காட்டலாம்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.