கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மீதான அவதூறு வழக்கு தொடர்பில், தோனியை விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக புகார் வந்ததையடுத்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தலைமையில் விசாரணை நடந்தது.
அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது அறிக்கையில் சம்பத்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக, கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சம்பத்குமார் மேல்முறையீடு செய்த நிலையில், தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி சம்பத் குமாரை 15 நாட்கள் சிறைக்கு அனுப்பிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு எம்எஸ் தோனிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.