head


விஜயின் அரசியல் கட்சி குறித்து ஒரே ஒரு வார்த்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.!

|2024-02-07 12:15:36|General| Page Views: 102

நடிகர் விஜய் அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஒரே ஒரு வார்த்தை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை திரும்பிய ரஜினி கடந்த சில நாட்களாக ஆந்திராவில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அதில் கலந்து கொண்டிருந்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்து விஜய்யின் அரசியல் கட்சி குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டபோது அவர் ’வாழ்த்துக்கள்’ என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு சென்று விட்டார்.

இதனை அடுத்து விஜயின் அரசியல் கட்சிக்கு ரஜினியின் ஆதரவு உண்டு என்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ரஜினி ரசிகர்கள் விஜயின் அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.