head


திருகோணமலையில் தொடருந்தில் மோதி சிறுவன் பலி !

|2024-02-12 09:47:11|General| Page Views: 89

திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் தொடருந்துடன் மோதி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (11.02.2024) இடம்பெற்றுள்ளது.

இதன் போது முள்ளிப்பொத்தானை யூனிட் 07 பகுதியை சேர்ந்த 14 வயதுடைய நளீம் முஹம்மது சப்ரிட் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்துடன் சிறுவன் பாலத்துக்கு அருகில் சக நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் அனர்த்தத்தில் பாதிப்புற்ற கடற்றொழிலாளர்களுக்கு நிவாரண உதவி மட்டக்களப்பில் அனர்த்தத்தில் பாதிப்புற்ற கடற்றொழிலாளர்க



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.