head


நாளை டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் தீர்மானம் !

|2024-02-12 11:36:40|General| Page Views: 90

டெல்லியை நாளை முற்றுகையிட ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப்,பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லில் கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டத்தைப் போன்று மீண்டுமொரு பாரிய போராட்டத்தை நாளை முதல் முன்னெடுக்க பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு சுமார் 200 விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் வழங்குதல் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், கோரிக்கைகள் நிறைவேறும்வரை இப்போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாமாநில எல்லைகளில் கூட்டங்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு,அப்பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.