head


இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இலங்கையர்களின் அருவெறுக்கதக்க செயற்பாடுகளும் !

|2024-04-20 08:48:25|General| Page Views: 252

இலங்கைக்கு வரும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது. சுற்றுலாத்துறை என்பது பொருளாதாரத்தை சீர்தூக்கி நிறுத்தும் பிரத்தியேக துறையாக காணப்படுகின்றது.

ஒப்பீட்டளவில் பெருந்திரளான சுற்றுலா பயணிகளை இலங்கை ஈர்க்கிறது. இலங்கையின் நல்ல காலநிலை ,இயற்கையழகு,கடற்கரைகள்,வரலாற்று இடங்கள் மற்றும் இலங்கையுள்ள மூவின மக்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களினால்தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையை தெரிவு செய்கின்றனர்.

அந்த வகையிலேயே கடந்த 14ஆந் திகதி சமூக வலைத்தளங்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் காணொளிகள் அதிகமாக வைரல் ஆனது. இந்த காணொளியில் முதலாவது ,

1. கொழும்பு அழுத்தக்கடை வீதியோர கடையொன்றில்வெளிநாட்டு பிரயாணி ஒருவரிடம் இடியப்ப கொத்து 1900 ரூபாய்க்கு விற்கப்பட்டது மட்டுமல்லாமல் அவரை அவதூறாக பேசியது மட்டுமல்லாமல் அவரை கடையில் இருந்து விரட்டியது.

2. களுத்துறை பிரதேசத்தில் வடை ஒன்றுக்கு 800 ரூபாய் வெளிநாட்டு பிரயாணியிடம் அறவிட்டது. இவ்வாறான சம்பவங்கள் உண்மையில் வருத்தத்தை அளிக்கின்றது .

வெளிநாட்டில் இருந்து வரும் பிரயாணிகளிடம் ஏமாற்றி காசு பறிப்பது என்பது இலங்கையர் அனைவரையும் குறைத்து மதிப்பிட வழிவகுக்காதா ? அதுமட்டுமன்றி இலங்கைக்கு வரும் பிரயாணிகளுக்கு இது போன்ற அனுபவங்களை ஏற்படுத்தும் போது இலங்கைக்கு வரும் பிரயாணிகளின் அச்சம் அதிகரிக்கும்.

அதுமட்டுமன்றி கடந்த மாதத்தில் கூட வெளிநாட்டு பயணிகளை நாவலபிட்டி ரயில் நிலையத்தில் அடித்து விரட்டியதும் குறிப்பிடக்கூடியது. வெளிநாட்டு பயணிகளை இழிவாக பேசுவதும் அவர்களை அடிப்பதும் ஒட்டுமொத்த இலங்கை நாட்டுக்கே அவப்பேரை ஏற்படுத்தும் அல்லவா? இப்போதுதான் இலங்கை பொருளாதார மந்தகதியில் இருந்து மீண்டு கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் இவ்வாறான செயற்பாடுகள் தேவைதானா ?

இனி வரும் காலங்களில் சரி இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரயாணிகளை பாதுகாப்பதும் ஒவ்வொரு இலங்கை நாட்டு மக்களின் பொறுப்பாகும்



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.