head


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என கூறி முதல் சேர்க்கும் நாடகங்கள் ஆரம்பம் !!!!

|2024-04-25 12:49:08|General| Page Views: 722

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது. முன்னாள் போராளிகளின் பெயர்களை கூறியும் யுத்த கால கதைகளை பேசியும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முதல் சேர்க்கும் நாடகங்கள் இனிதே அரங்கேறியுள்ளன.

உண்மையில் இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் யாருக்காக? எதற்காக ? இம்முறையும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை நிச்சயம் அனுஷ்டித்தே ஆக வேண்டும் என ஒற்றைக்காலில் விடாப்பிடியாய் நிற்பவர்கள் யார்?

நிச்சயமாக கூற முடியும் இதன் பின்னணியில் இருப்பவர்கள் அரசியல்வாதிகளே. இவ்விடயங்களில் இவர்கள் கூடுதல் அக்கறை காட்டுவதற்கான காரணம் என்ன ? ஏனெனில் மக்களின் மனதில் இவர்களால் எந்த ஒரு இடத்தையும் பிடிக்க முடியாது எனவே கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மக்களிடத்தில் ஞாபகம் ஊட்டி அதனூடாக மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

30 வருட கால யுத்தம் நிறைவு பெற்ற பின் மக்கள் சற்று நிம்மதி அடைந்து அனைத்தையும் மறந்து தங்களின் வாழ்க்கையைதொடங்கி விட்ட நிலையில் சந்தோஷமாக வாழ்வதற்கான சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எமது தமிழ் அரசியல்வாதிகள் உறுதியாக உள்ளனர் .இதனாலேயே கடந்த கால துன்ப நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் மக்கள் மனதில் கொண்டு சேர்க்க முயலுகின்றனர்.

ஆனால் இவ்வரசியல்வாதிகள் ஈழப்போர் இடம்பெற்றபோது எங்கிருந்தார்கள் ? இவர்கள் நினைத்திருந்தால் அப்போது ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையோ தொடர் போராட்டத்தையோ முன்னெடுத்து யுத்தத்தை நிறுத்த முயற்சி எடுத்திருக்கலாமே? ஏன் அன்று செய்யவில்லை.ஆனால் இப்போது மட்டும் அவர்களின் அரசியல் நாடகங்களுக்காக இதனை முன்னெடுக்கின்றனர்.

எனது நோக்கம் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை அனுஷ்டிக்க வேண்டாம் என்பதல்ல . யதார்த்தத்தையும் உண்மைத்தன்மையும் எமது உறவுகள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியே ஆகும்.

உண்மையில் நாம் அனுஷ்டிக்க விரும்பினால் தனிப்பட்ட ரீதியாக தங்களின் வீட்டுக்குள்ளே கூட அனுஷ்டிக்க முடியும் .அது நிச்சயம் அர்த்தமுள்ளதாகவும் ஆத்மார்த்தமானதாகவும் இருக்கும்.

மிகந்திரளான மக்களை ஒன்றுக் கூடி மிகப்பெரிய நிகழ்வாக இதனை முன்னெடுப்பதில் ஒரு தந்திர அரசியல் ஒளிந்துள்ளது . புலம்பெயர் பணத்திற்கு கணக்கு காட்டுவதற்காகவும் நாங்கள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகள் என மாயை ஒன்றை ஏற்படுத்தவுமே இவ்வாறான நிகழ்வுகளை எமது அரசியல்வாதிகள் ஒழுங்கு செய்கின்றனரரே வேறொரு அர்த்தப்புஷ்டியுள்ள காரணங்கள் எதுவுமேயில்லை.

கடந்த காலத்தை மாற்றியமைக்க இனி எவராலும் முடியாது. இனிவரும் சந்ததியினராவது இந்நாட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் அவர்கள் மனதிலும் கடந்த கால கசப்பான சம்பவங்களை கூறி அவர்களையும் மீண்டும் ஒரு இருண்ட யுகம் நோக்கி தள்ளப் போகிறீர்களா?

தற்போது இதன் உண்மை தன்மையை விளங்கிக் கொண்டு சரியாக கையாண்டால் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிகழ்வை அரசியலுக்காக பயன்படுத்துவதை தடுக்கலாம்.

இவர்களின் அரசியல் இலாபங்களுக்காக இத்தகைய நிகழ்வுகளை அரசியலாக முன்னெடுத்து இனிவரும் சந்ததியினர் மத்தியிலும் இனவாதத்தை விதைக்க முயற்சிக்கின்றனர். மக்களிடையே இனவாதமும் ஒற்றுமையின்மையும் காணப்படும் வரையிலேயே இவர்களின் அரசியல் நிலைத்திருக்கும் .இதனாலேயே இவர்கள் இவ்வாறான நிகழ்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்.

கடந்த கால நிகழ்வுகளை எடுத்து நோக்கின் இத்தகைய நிகழ்வுகளில் பங்குப்பற்றுவதால் அரசியல்வாதிகளோ அவர்களைச் சார்ந்தவர்களோ சிறைபிடிக்கப்பட போவதில்லை ஆனால் எங்கள் அப்பாவி மக்கள் சிறைபிடிக்கப்படுகின்றனர் .எனவே மக்கள் சற்று விழிப்புணர்வோடு அவதானமாய் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.