head
Join Us


சூர்யகுமார் யாதவின் பிடியெடுப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த காணொளி

|2024-07-04 16:23:51|General| Page Views: 137

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்ற இருபதுக்கு20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் சூர்ய குமார் யாதவின் (Surya Kumar Yadav) பிடியெடுப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

தென்னாபிரிக்க அணி வெற்றி பெற இறுதி ஓவருக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய முதல்பந்தை டேவிட் மில்லர் (David Miller) லோங் - ஆஃ (Long-off) திசைக்கு அடித்தார்.

கிட்டத்தட்ட 6 ஓட்டங்களை நோக்கி சென்ற பந்தை துல்லியமாக தடுத்து நிறுத்திய சூர்ய குமார் யாதவ், பந்தை பிடித்து மில்லரை ஆட்டமிழக்கவும் செய்தார்.

பும்ரா (Bumrah), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த நிலையிலும், குறித்த பிடியெடுப்பே, இந்திய அணிக்கு கிண்ணத்தை பெற்றுக்கொடுத்ததாக இந்திய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனினும், இந்த பிடியெடுப்பின் போது சூர்யாவின் கால், பௌண்டரி எல்லைக்கோட்டை தொட்டதாக சில கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக தற்போது வெளியாகியுள்ள காணொளியில் இருந்து, இது தெளிவான ஒரு பிடியெடுப்பு எனவும் மூன்றாம் நடுவரின் தீர்மானம் துல்லியமானது எனவும் அறியமுடிகின்றது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.