யாழில் படுகொலை செய்யப்பட்ட பெண் முல்லைத்தீவில் இராணுவ மரியாதையுடன் அடக்கம் !
|2024-07-10 11:50:32|General|
Page Views: 83
யாழ்ப்பாணம்(Jaffna) - கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவத்தில் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக கேப்பாபிலவு இராணுவ முகாமில் கடமையாற்றியுள்ளார்.
இந்நிலையில் பெண்ணின் உடலம் நேற்று(09.07.2024)மூங்கிலாறு தெற்கில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டு பூரண இராணுவ மரியாதையுடன் மூங்கிலாறு தெற்கு இந்து மயானத்தில் உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவர் தனது இரண்டாவது கணவனுடன் யாழ் கொழும்புத்துறை ஆனந்தவடலி பகுதியில் வசித்து வந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.