head
Join Us


வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது !

|2024-07-10 16:56:49|General| Page Views: 56

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று (10.07.2024) நள்ளிரவு 1.30 மணியளவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து, மன்னார் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட கூலர் ரக வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, 28 கிலோ 750 கிராம் கேரள கஞ்சாவை வவுனியா பொலிஸார் பறிமுதல் செய்ததுடன், மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.