head
Join Us


தீவிர பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் !

|2024-08-01 09:29:10|General| Page Views: 112

அமெரிக்க (America) தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன் விலகியதன் பின்னர், கடும் போட்டி நிலவும் 6 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் தீவிரமாக செயற்பட்டு வருவதாக புதிய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளனன.

இது தொடர்பில் ப்ளூம்பெர்க் செய்திகள் முன்னெடுத்த ஆய்வுகளிலேயே கமலா ஹாரிஸின் ஆதரவு அதிகரித்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 24 முதல் 28ஆம் திகதி வரையான நாட்களில் முன்னெடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில்,மிச்சிகனில் ட்ரம்பை விட ஹாரிஸ் 11 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கின்றமை தெரியவந்துள்ளது.

இவ்வாறிருக்கையில் அரிசோனா, விஸ்கான்சின் மற்றும் நெவாடாவில் ட்ரம்பை விட ஹாரிஸ் 2 சதவீத புள்ளிகள் முன்னிலையில் உள்ளதாகவும், பென்சில்வேனியாவில் டொனால்ட் ட்ரம்ப் 4 புள்ளிகள் முன்னிலையும், வட கரோலினாவில் 2 சதவிகிதம் முன்னிலையில் உள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஜார்ஜியாவில் இருவருக்கும் ஒரே பலமுள்ளதாகவும், ஏழு மாகாணங்களில் விஸ்கான்சின் மட்டுமே ட்ரம்ப் தனது வெற்றி வாய்ப்பை ஜோ பைடனுடன் ஒப்பிடும்போது ஹாரிஸுடன் குறைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜூலை 1 முதல் 5 வரையான கருத்துக்கணிப்பில் டொனால்ட் ட்ரம்ப் அரிசோனாவில் பைடனை விட 3 சதவீத புள்ளிகளால் முன்னிலையில் இருந்தார்.

பைடன் மிச்சிகனில் 5 புள்ளிகளும், விஸ்கான்சினில் 3 புள்ளிகளும் முன்னிலை பெற்றிருந்தார்.

இதனையடுத்து தற்போது ஜோ பைடன் விலகியுள்ள நிலையில், ட்ரம்பை பின்னுக்கு தள்ளி, கமலா ஹாரிஸ் 6 மாகாணங்களில் முன்னிலை கண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமின்றி, துணை ஜனாதிபதி யார் என அறிவித்த பின்னர், இந்த 7 மாகாணங்களுக்கும் சுற்றுப்பயணம் ஒன்றை இரு வேட்பாளர்களும் முன்னெடுக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.