துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜோ ரூட் !
|2024-08-01 09:54:36|General|
Page Views: 159
சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தை தனதாக்கியுள்ளார்.
அதன்படி, இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஜோ ரூட் 872 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில், 859 புள்ளிகள் பெற்று நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 3ஆவது இடத்தை பெற்றுள்ளனர்.
இதற்கமைய, அஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
இந்தியாவின் ரோகித் சர்மா 6ஆவது இடத்திலும், ஜெய்ஸ்வால் 8ஆவது இடத்திலும், விராட் கோலி 10ஆவது இடத்திலும் உள்ளனர்.
Comment Box
Post Your Comment Here....