வயநாடு (Wayanad) நிலச்சரிவில் சிக்குண்டோருக்கான கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை நிதியுதவி அளிக்கவுள்ளதாக பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி (Gautam Adani) தெரிவித்துள்ளார்.
கேரளா (Kerala) வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, பல உயிர்களை காவு வாங்கிய வயநாட்டில் நடந்த பேரிடர் மனவேதனை அளிப்பதாகவும் இந்த கடினமான நேரத்தில் அதானி குழுமம் கேரளாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது என மேலும் கூறியுள்ளார்.
இந்தநிலையில், தற்போதுவரை 270 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் மீட்பு படையினர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.