நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யும் என வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமணடலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.