head


சீன எல்லைப் பிரச்னை தொடர்பில் விளக்கம்!

|Saturday, 17th July 2021|| Page Views: 1

சீன எல்லையில் நிலவும் பிரச்னை தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் அந்தோணி மற்றும் சரத்பவாரிடம் முப்படை தலைமை தளபதி, ராணுவ தளபதி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் அந்தோணி, சரத்பவார் ஆகியோருடன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர், சீன எல்லையில் நிலவும் பிரச்னை குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து சரத்பவார், அந்தோணி ஆகியோர் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பிபின் ராவத் மற்றும் நரவானே ஆகியோர் விளக்கம் அளித்தனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.