head


பிரதமர் மோடி சரத்பவார் சந்திப்பு!

|Sunday, 18th July 2021|| Page Views: 1

டில்லியில், பிரதமர் மோடியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடம் நீடித்தது. சரத்பவாருடனான சந்திப்பு குறித்து, பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தது. சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சரத்பவார், பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

பார்லிமென்ட் கூட்டத்தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது, புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகம் குறித்து பிரதமருடன் சரத்பவார் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இன்று கடிதம் ஒன்றை மோடிக்கு, சரத்பவார் கடிதம் எழுதி இருந்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.