head


பாலியல் தொல்லையும் வன்கொடுமையாகவே கருதப்படும்: மும்பை நீதிமன்றம்!

|Sunday, 18th July 2021|| Page Views: 1

பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் பாலியல் வன்கொடுமைக் குற்றத்தின் கீழ்தான் வரும்' என, மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு மாவட்ட நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 'அந்த பெண்ணுடன் உடல்ரீதியாக தான் எவ்வித உறவும் கொள்ளவில்லை' என, தனது தரப்பின் வாதமாக அவர் முன்வைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 'பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாலியல் ரீதியாக குற்றம்சாட்டப்பட்டவர் துன்புறுத்தியதற்கான தடயவியல் ஆதாரம் உள்ளது. இருவருக்கும் இடையில் உடலுறவு நடைபெறவில்லை என்றாலும், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதால், அது சட்டப்படி குற்றமாகும். இது இந்திய சட்டப் பிரிவு 376-ன் படி இந்த குற்றமும் பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது' எனக்கூறி அவருடைய மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.