head


முன்னைவிட மோசமாகத் தாக்க உள்ள கொரனோ - பிரான்சின் சுகாதார அமைச்சர்!

|Monday, 19th July 2021|Political| Page Views: 1

பிரான்ஸ் மீண்டும் கொரனோத் தடுப்புக் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கொரனோத் தொற்றின் தீவிரம் கண்கூடாக தெரிகின்றது. இது முன்னைய கொரனோத் தொற்று அலைகளை விட மிகவும் மோசமாக இருக்கும் எனப் பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் பிரான்ஸ் மீண்டும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள விதிக்கலாம் என்பதனையும் தான் மறுப்பதற்கில்லை எனவும் அமைச்சர் செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உடனடியாக சுகாதாரக் கட்டுப்பாடுகளை விதித்து, கொரோனப் பரவலைத் தடுக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு இடைவெளிகள் கட்டாயமாக்கப்படல் வேண்டும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.