head


மும்பை கனமழைக்கு 15 பேர் பலி!

|Monday, 19th July 2021|| Page Views: 1

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை 1 மணியளவில் செம்பூர் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு வீடு ஒன்று சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். விக்ரோலி பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

நிகழ்விடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஐந்து நாட்களுக்கு மும்பையில் கனமழை தொடரும் என்கிறது இந்திய வானிலை ஆய்வுத்துறை. இந்த நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.