head


40 நகரங்களை இணைக்கும் வகையில் 10 வந்தே பாரத் ரயில்கள்!

|Monday, 19th July 2021|| Page Views: 1

நாற்பது நகரங்களை இணைக்கும் வகையில், 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையான வந்தே பாரத்தில் 16 குளிர்சாதன பெட்டிகள் உள்ளன. 1,128 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 160 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் தானியங்கி கதவு, ஜிபிஎஸ் வசதி, ஹாட்ஸ்பாட் வசதிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், வரும் 2022 ஆக., மாதத்திற்குள் 40 நகரங்களை இணைக்கும் வகையில் 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. ரயில்வே அமைச்சராக பதவியேற்றுள்ள அஸ்வினி வைஷ்ணவ், நாட்டின் ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் கூடுதலாக 10 வந்தே பாரத் ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதற்காக, 44 வந்தே பாரத் ரயில்களுக்கு, மின்னணு சாதனங்களை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஐதராபாத்தை சேர்ந்த மேத்தா நிறுவனம், அந்த சாதனங்களை உடனடியாக உற்பத்தியை துவங்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக நேற்று, ரயில்வே வாரியம் அவசர ஆலோசனை நடத்தியது. இதில் ரயில்வே வாரிய உறுப்பினர்கள், உற்பத்தி பிரிவின் பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ரயில்களை இயக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள 3 உற்பத்தி பிரிவுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், மாதத்திற்கு 6 அல்லது 7 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்ய முடியும் என ரயில்வே கணக்கிட்டு உள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.