head


அனைத்து கட்சிக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு!

|Monday, 19th July 2021|| Page Views: 1

பாராளுமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜூலை 19) துவங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆலோசனை நடத்தினார். அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கும்படி, கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணமுல் எம்.பி., டெப்ரிக் ஓ பிரையன், திமுக எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தொடரில் 30 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அனைத்து விவகாரங்கள் குறித்தும் பார்லிமென்டில் ஆலோசிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது. பணவீக்கம், கோவிட் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.