head


ரஷ்யாவில் பற்றி எரியும் காட்டுத் தீ!

|Tuesday, 20th July 2021|Natural Disaster| Page Views: 1

ரஷ்யாவின் வனப்பகுதியில் 8 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சைபீரிய வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 4,500 ஹெக்டேர் பரப்பளவில் 22 புதிய இடங்களில் நெருப்பு பற்றி எரிகிறது. இதனால் ஏற்பட்டுள்ள புகை மண்டலம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கோர்னி என்ற பகுதியை புகை சூழ்ந்துள்ளதால் அங்கு வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து எரியும் நெருப்பை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன், இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். நெருப்பு தொடர்ந்து எரிவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.