head


ஜனாதிபதி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு; சட்டசபை நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு!

|Tuesday, 20th July 2021|| Page Views: 1

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், முதன்முறையாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க டில்லி சென்றார். இன்று மதியம் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியை சந்தித்த ஸ்டாலின், பல்வேறு கோரிக்கை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சந்திப்பின்போது திமுக எம்.பி., டி.ஆர்.பாலு உடனிருந்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக சட்டசபை அமைந்து நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி சட்டசபை நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த விழாவிற்கு தலைமை ஏற்க வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தேன். மேலும் சட்டசபையில் கருணாநிதியின் திருவுருவ படம் திறப்பதற்கும், அதேபோல் மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம், கிண்டியில் அமையவுள்ள அரசு மருத்துவமனை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி அமைக்கப்படவுள்ள நினைவுத்தூண் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்ட வருகை தருமாறு கோரிக்கையை முன்வைத்தேன். ஜனாதிபதியும் வருவதாக உறுதியளித்தார். நீட் தேர்வு, மேகதாது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை.

3வது அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம். ஒருவேளை வந்தால் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.