head


ஆப்கன் அதிபர் மாளிகை அருகே ஏவுகணை தாக்குதல்!

|Wednesday, 21st July 2021|Crime| Page Views: 1

ஆப்கன் அதிபர் மாளிகையின் அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “பக்ரீத்துக்காக சிறப்புத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆப்கன் அதிபர் மாளிகை அருகே ஏவுகணை தாக்குதல் நடந்தது.

தொடர்ந்து அப்பகுதியில் வெடிச் சத்தங்கள் கேட்டாலும் அதிபர் அஷ்ரப் கானி தொடர்ந்து தனது தொழுகையை நடத்தினார். இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு தலிபான்கள், இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.