head


உளவுத்துறை எச்சரிக்கை!

|Wednesday, 21st July 2021|| Page Views: 1

சுதந்திர தினத்தன்று, டில்லியில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக, போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும், ஆக.,15 சுதந்திரதினத்தன்று, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் டுரோன் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள், சதிச்செயலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால், முழு அளவில் உஷாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, டுரோன் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை விமானப்படையினர் உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் , டுரோன்கள் செயல்பாடு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.