head


மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கலாம்!

|Tuesday, 12th October 2021|Political| Page Views: 1

அரசாங்கத்தின் குறைபாடுகள் மற்றும் செய்யக்கூடாத விடயங்களை அடையாளம் கண்டு முன்னேறினால், தற்போது உடைந்துள்ள மக்களின் நம்பிக்கையை அடுத்த மூன்று ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியும் என்று தொழில்துறை அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் மக்களின் சிந்தனையையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். இல்லையெனில், ஒருவர் கடந்த காலத்தை எவ்வளவு சரியாகப் படித்தாலும் குறிக்கோள்கள் அடையப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டார்.

கட்டுபெத்தவில் உள்ள இலங்கை தொழில்துறை அபிவிருத்தி சபையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.