head


சுப்ரமணியன் சுவாமி கொழும்பை வந்தடைந்தார்!

|Wednesday,13th October 2021|Political| Page Views: 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமைய பாரதீஜ ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அவரின் நண்பர் ஜெகதீஷ் ஷெட்டி ஆகியோர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது குடும்பத்தினரின் நவராத்திரி விழாவில் பங்கேற்குமாறு விடுத்த அழைப்பிற்கமையவே அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக்க தினுஷான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் அவர்களை வரவேற்றுள்ளார்கள்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.