head


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வெளிநாடு பயணம்!

|Monday, 12th September 2022|| Page Views: 1

உலகின் மிகப்பெரிய பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு அமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திகழ்ந்து வருகிறது.

8 நாடுகள் உறுப்பினர்கள்

இந்த அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் பார்வையாளர்களாக உள்ள ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மங்கோலியா ஆகிய நாடுகள் முழு உறுப்பினர் ஆவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த அமைப்பில் பேச்சுவார்த்தை கூட்டாளிகளாக ஆர்மேனியா, அசர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை, துருக்கி உள்ளன.

நேரடி உச்சி மாநாடு இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019-ம் ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரில் நடந்தது.

அதன் பின்னர் கொரோனா வந்து விட்டதால் இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறவில்லை. தற்போது உலகமெங்கும் பெருமளவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் 15, 16 தேதிகளில் (வியாழன், வெள்ளி) நடைபெறுகிறது.

அதில் உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் விவாதிக்கப்படும். பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பது தொடர்பாகவும் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.