head


ராணி எலிசபெத் உடலுக்கு 10 லட்சம் பேர் அஞ்சலி: கணவர் கல்லறை அருகே அடக்கம்!

|Tuesday, 20th September 2022|General| Page Views: 1

உலக நாடுகளின் பார்வையை கடந்த 12 நாட்களாக தன்பக்கம் ஈர்த்திருந்தது, இங்கிலாந்து. ராணி எலிசபெத் மறைவு அந்த நாட்டின் நீண்ட கால ராணியாகவும், காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் 70 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96), கடந்த 8-ந்தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் காலமானார்.

பல்லாண்டுகளாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த ராணியின் மறைவு, இங்கிலாந்து மட்டுமின்றி உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் (73) மன்னர் ஆனார். பொதுமக்கள் அஞ்சலி ஸ்காட்லாந்தில் இருந்து லண்டன் கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத்தின் உடல், பக்கிங்ஹாம் அரண்மனையில் அரச குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் கடந்த 14-ந் தேதி மாலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் மீது கிரீடமும், செங்கோலும் வைக்கப்பட்டன.

பக்கிங்ஹாம் அரண்மனையில் மட்டுமின்றி தங்கள் நெஞ்சங்களிலும் பல்லாண்டுகளாக ராணியாக வீற்றிருந்த தங்கள் மகாராணிக்குலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 4 நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய நாட்டு மக்களின் பற்றுறுதி அரச குடும்பத்தினரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

உலக தலைவர்கள் குவிந்தனர் இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட பல்வேறு நாடுகளின் மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என சுமார் 500 தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக லண்டனுக்கு பறந்தனர். இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லசின் அழைப்பின் பேரில் லண்டனில் குவிந்த அவர்களுக்கு, பக்கிங்ஹாம் அரண்மனையில் நேற்று முன்தினம் அவர் வரவேற்பு அளித்தார்.

முன்னதாக வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு ஜோபைடன், திரவுபதி முர்மு உள்ளிட்ட உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அருகிலுள்ள லேன்காஸ்டர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் தங்கள் நாடுகளின் சார்பில் இரங்கல் குறிப்புகளையும் எழுதினர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.