head


இனப்பிரச்சினைக்கு தீர்வு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால்தேசிய சபை மூலமாக!

|Wednesday, 21st September 2022|General| Page Views: 1

அனைவரும் இணைந்து செயற்பட்டால் உருவாக்கப்படவுள்ள தேசிய சபை மூலம் பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகளோடு இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியுமென அமைச்சர் நசீர் அஹமட் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் போதும் பிரதான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்படவுள்ள தேசிய சபை மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பதுடன் அனைவரும் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய சபை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதேஅமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாடு தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய சபை ஒன்றை அமைப்பதற்கான பிரேரணை சபையில் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பல சபைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இதுபோன்ற ஒரு சபை இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த சபை மூலம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும். ஒரு சட்ட வாக்கமாக இதனை செயற்படுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இதனை பயன்படுத்த முடியும்.

முதலில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணக்கூடிய ஒரு சபையாக நாம் இதனைப் பார்க்க வேண்டும்.

இதன் மூலம் பொருளாதாரம், அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அதே வேளை இனப் பிரச்சினைக்கான தீர்வையும் இதன் மூலம் காண முடியும் அதற்கான யோசனைகளை சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு முன் வைக்கலாம். காலங்களை வீணடிக்காமல் உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.