head


ரஷிய ராணுவத்தை அணி திரட்ட அதிபர் புதின் உத்தரவு!

|Wednesday, 21st September 2022|Political| Page Views: 1

ரஷிய அதிபர் புதின் உத்தரவின்பேரில் கடந்த மார்ச் 24-ம் தேதியன்று உக்ரைனில் தொடங்கிய போரானது, முடிவு ஏதும் எட்டப்படாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனும் தாக்குப்பிடித்து ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. இந்தநிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவத்தை அணிதிரட்டல் தொடர்பான கோப்புகளை கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவத்தை அணிதிரட்டலை அறிவித்தார். மேற்கு எல்லை கடந்துவிட்டது. ரஷியாவை பலவீனப்படுத்தவும், பிரிக்கவும், அழிக்கவும் மேற்கத்திய நாடுகள் முடிவு எடுத்துள்ளது. ரஷியாவை பலவீனப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கின்றன. பதிலடி கொடுக்க எங்களிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளது. தங்கள் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்க வீரர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். ரஷியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.