head


பாலஸ்தீன போலீசாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே மோதல் - ஒருவர் பலி!

|Wednesday, 21st September 2022|Political| Page Views: 1

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.

அதேவேளை மேற்குகரை பகுதியை பாலஸ்தீன அதிபரான முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பு போன்று மேலும் பல அமைப்புகள் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதால் அந்த அமைப்புகளை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

இதனிடையே, மேற்குகரையின் நப்லஸ் நகரின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும், இந்த பகுதிகளை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு நிர்வகித்து வருகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.