head


டொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்: புதிதாக மோசடி வழக்கு தாக்கல்!

|Thursday, 22nd September 2022|Political| Page Views: 1

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் என்பவர், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மூன்று வாரிசுகளுக்கு எதிராக 250 மில்லியன் டாலர்கள் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மோசடி செய்ததற்காக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி வழக்கு தொடர்பாக சுமர் 200 பக்க ஆவணத்தில், டிரம்ப்பிற்கு சொந்தமான அனைத்து வணிகத்தின் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிரம்பின் சொத்துக்களை பொய்யாக உயர்த்த முயற்சிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளதாவது:- டிரம்ப், தனது குழந்தைகளான இவான்கா, டான் ஜூனியர், எரிக் மற்றும் டிரம்ப் அமைப்பில் உள்ள நிர்வாகிகளின் உதவியுடன், தொடர்ந்து கடன் ஒப்பந்தங்களை திருப்திப்படுத்த டிரம்பின் சொத்து நிகர மதிப்பை பொய்யாக உயர்த்தினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.