head


மழை என்பது மனித சமுதாயத்திற்கு இறைவன் கொடுத்த மாபெரும் கொடை!

|Tuesday, 08th November 2022|General| Page Views: 264

மழை என்பது இறைவன் மனித சமுதாயத்திற்கு கொடுத்த மிகப்பெரும் கொடை ஆகும். மழை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த பூமியில் உயிரினங்கள் செழித்து வளராமல் இருந்திருக்கும். மனித குலத்திற்கு நன்மை செய்யும் மழை சில நேரங்களில் மனிதர்களுக்கு தொந்தரவையும் கொடுக்கிறது அபரிமிதமான மழை புயல் மழை மழை தவறுதல் போன்ற காரணங்களினால் கூட சிலருக்கு கசப்பாக மாறிவிடுகிறது. இருந்தபோதிலும் மழை பொழியும் நாள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது வயதானவர்களுக்கும் கூட மகிழ்ச்சியை கொடுக்கிறது

அதிக வெப்பம் காரணமாக கோடையில் நிலவும் சூழ்நிலை முடிவுக்குக் கொண்டு வரும் மழையை ஒவ்வொரு மக்களும் வரவேற்கின்றனர். இதன் காரணமாகவே மழை ஆரம்பிக்கும் காலங்களில் திருவிழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன

குழந்தைகளுக்கு மழை நாள் என்பது மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு தினமாகும் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தால் அன்றைய தினம் அவர்களுக்கு மிகுந்த குதூகலத்தை கொடுக்கிறது.

புதிய மழை தரும் புதிய வாசத்தையும் புதிய குளிர்ந்த காலைப் பொழுதையும் விரும்பாதவர்கள் இவ்வுலகில் இல்லை

விவசாய தொழிலுக்கு மிக முக்கிய ஆணிவேராக இருக்கும் நன்னீர் மழையானது ஒலிய தொடங்கியவுடன் விவசாயிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டுகிறது. விவசாய தொழில் மட்டுமல்லாது பூமியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அனைத்து தொழில்களுக்கும் நன்னீர் மலையே மிகச்சிறந்த ஆரம்பமாக இருக்கிறது.

பூமியில் 70 விழுக்காடு களுக்கும் மேலாக நீர் நிலைகள் இருந்தாலும் அவற்றில் மனிதன் உபயோகிக்கும் நன்னீரின் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது அந்த நீரை மனிதன் வசிக்கும் பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது மழைநீர் சுழற்சி ஆகும் அத்தகைய மழைநீரை சேமிக்கும் பழக்கம் கொண்டுள்ள சமூகமே மிகுந்த எழுச்சியை கொண்ட சமூகமாக இருக்கிறது.

வளர்ந்து வரும் இந்த அறிவியல் காலகட்டத்தில் மழைநீரை சேமிக்கும் பழக்கம் சிறுவயது முதற்கொண்டே பழகிக் கொள்ள வேண்டிய ஒரு பழக்கமாகும். முந்தைய காலங்களில் நன்னீர் நிலைகளில் தேடிப் பயணிக்கும் கூட்டமாக மனிதகுலம் இருந்து வந்தது இதன் காரணமாகவே நன்னீர் நிலைகளில் உள்ள ஏரிகள் குளங்கள் அருகிலேயே மனித சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டன இன்றைய சூழ்நிலையில் நாம் இருக்கும் இடத்தில் பொழியும் மழையை சேமிப்பது ஒரு நாகரீகம் உள்ள சமூகத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகும்



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.