head


பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளன!

|2022-11-24 10:21:44|General| Page Views: 35

இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் ஒன்று இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் தொற்று நோயுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதால், முறையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.