இந்தியாவில் ரஸ்யாவின் கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகள் தயாரிப்பு!
|2023-01-18 14:21:56|Political|
Page Views: 122
இந்தியாவில் ரஸ்யாவின் கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகள் தயாரிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்தோ-ரஷ்யா துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரஸ்யாவின் கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகளைத் தயாரிக்க தொடங்கியுள்ளது.
இது தொடா்பாக ரஸ்ய அரசின் ராஸ்டெக் பாதுகாப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், இந்தோ-ரஷ்யா துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகளின் முதல் தொகுப்பை தயாரித்துள்ளது.
அவற்றை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். கலாஷ்நிகோவ் ஏகே-203 துப்பாக்கிகள் தயாரிப்பை தொடங்கியதன் மூலம், இந்திய பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகளில் பயன்படுத்துவதற்கு வசதியான, உயா்தர, நவீன சிறிய ரக ஆயுதங்கள் பிரவேசிக்கும்.
சிறந்த பணிச்சூழல், துப்பாக்கிச்சூடு வீரா்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் தன்மை, உயா் செயல்திறன் பண்புகள் ஆகியவற்றை இந்த வகை துப்பாக்கி ஒருங்கிணைக்கிறது. இது உலகின் சிறந்த தாக்குதல் துப்பாக்கிகளில் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.