சுனாமிகளை உருவாக்கும் ஆயுதத்தை தயார் செய்த ரஷ்ய விஞ்ஞானிகளால்!
|2023-01-20 11:10:22||
Page Views: 145
கதிரியக்கத்தால் சுனாமிகளை ஏற்படுத்தும் பேரழிவைத் தரக்கூடிய ஆபத்தான ஆயுதம் ஒன்றை ரஷ்ய விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய விஞ்ஞானிகளால் Poseidon என அழைக்கப்படும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலானது பேரழிவை ஏற்படுத்தும் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கும் திறன் கொண்டது எனவும், விளாடிமிர் புடின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மிகவும் மனிதாபிமானமற்ற பயங்கரமான ஆயுதம் இதுவெனவும் கூறுகின்றனர்.
இந்த ஆயுதம் தொடர்பில் வெளியான தகவலில், உற்பத்தி மற்றும் ஆரம்ப சோதனைகள் முடிவடைந்துள்ளது எனவும், இனி நீர்மூழ்கி கப்பல்களில் பொருத்தப்படும் இறுதிகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பேரழிவை ஏற்படுத்துமென எச்சரிக்கை
சிறப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே இந்த ஆயுதத்தை பயன்படுத்த இருப்பதாகவும் ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 200கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த Poseidon ஆயுதமானது எந்த எல்லைக்கும் சென்று தாக்கும் திறன் கொண்டது என ரஷ்ய தரப்பில் கூறப்படுகிறது.
கடலுக்கடியில் ரகசியமாக பயணிக்கக்கூடிய இந்த நீர்மூழ்கி கப்பலானது, கடலோரப்பகுதிகளை மொத்தமாக அழிக்கும் திறன் கொண்டது எனவும், இதனால் உருவாகும் சுனாமியானது இயற்கையாக உருவானது போன்றே இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.