அல்நாசர் கழக அணிக்கெதிரான நட்பு ரீதியிலான போட்டியில் பி.எஸ்.ஜி. அணி சிறப்பான வெற்றி! Anoj by Anoj 2023/01/20in உதைப்பந்தாட்டம், விளையாட்டு!
|2023-01-20 11:30:47|General|
Page Views: 45
பிரபல கால்பந்து கழக அணிகளான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும் (பி.எஸ்.ஜி.) சவுதி அரேபியாவின் அல்நாசர் கழக அணியும் மோதிய நட்பு ரீதியிலான போட்டியில், பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
கிங் ஃபஹ்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி, 5-4 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சார்பில், நட்சத்திர வீரர் மெஸ்ஸி 3ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், மார்க்கியுனோஸ் 43ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், செர்ஜியோ ராமோஸ் 53ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், கிளியன் எம்பாப்வே போட்டியின் 60ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும், ஹூகோ இக்கிடிக்கி 78ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், பெர்னட் 39ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
அல்நாசர் கழக அணி சார்பில், நட்சத்திர வீரர் கிறிஸ்டீயானோ ரொனால்டோ 34ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும், 51ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார்.
மேலும், ஜாங் ஹியூன் சூ 56ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், டலிஸ்கா 94ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
தலைமுறையின் சிறந்த கால்பந்து நட்சத்திரங்களாக போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டீயானோ ரொனால்டோ ஆகியோர் இப்போட்டியில், நேருக்கு நேர் மோதியிருந்தது உலகளவில் உள்ள பலகோடி கால்பந்து இரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.