தென்னாபிரிக்க அணிக்காக இரண்டாவது அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ள 39 வயது ஹாஷிம் அம்லா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் ஜக் கலிஸுக்கு (13,206) அடுத்து அதிக ஓட்டங்களாக 9,282 ஓட்டங்களை பெற்றிருக்கும் அம்லா, 124 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருப்பதோடு அவரது ஓட்ட சராசரி 46.64 ஆகும்.
அவர் 2004 தொடக்கம் 2019 வரை தென்னாபிரிக்காவுக்காக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் மொத்தம் 18,672 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு, ஒருநாள் போட்டிகளில் பெற்ற 27 சதங்கள் தென்னாபிரிக்காவின் சாதனையாக உள்ளது.
2012இல் இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் ஆட்டமிழக்காது அம்லா பெற்ற 311 ஓட்டங்களுமே தொன்னாபிரிக்க வீரர் ஒருவரின் அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களாகவும் உள்ளது.
எனினும் 2019 ஓகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அம்லா அது தொடக்கம் லீக் போட்டிகள் மற்றும் கவுண்டி கிரிக்கெட்டுகளில் மட்டும் விளையாடி வந்தார். தற்போது அதிலிருந்தும் விடை பெற்றுள்ளார்.
ஓய்வு அறிவிப்பு குறித்து சர்ரே கவுண்டி அணியின் வலைதளத்திற்கு அளித்த பேட்டியில், "எனக்கு ஓவல் மைதானத்தைப் பற்றிய சிறந்த நினைவுகள் உள்ளன. இறுதியாக அதை ஒரு வீரராக விட்டுச் செல்வது, என்ன நடந்தது என்பதற்கான மகத்தான நன்றியுடன் என்னை முழுமை அடைய செய்கிறது." என்று தெரிவித்தார்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.