பிரேசிலில் வரலாறு காணாத தொடர் வன்முறைக்கான காரணங்கள்
|2023-01-20 13:33:38|Political|
Page Views: 135
பிரேசிலில் (Brazil) வரலாறு காணாத வன்முறையை அந்நாடு தற்போது கண்டுகொண்டுள்ளது. இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபரான இடதுசாரி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசுகளின் எழுச்சியாக 2018 இல் மெக்சிகோவும், பின்னர் 2019 இல் அர்ஜென்டினாவும் எழுந்தன. மேலும் 2020 இல் பொலிவியாவில் இடதுசாரி அரசு நிறுவப்பட்டது.
அதன்பின் 2021 இல் பெரு, ஹோண்டுராஸ் மற்றும் சிலி, பின்னர் கொலம்பியாவை தொடர்ந்து தற்போது பிரேசில் 2022 இல் இடதுசாரி அரசை அந்நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்துள்ளனர்.
பனிப்போரின் உச்சக்கட்ட காலத்தின்போது, லத்தீன் அமெரிக்காவில் தொடர்ச்சியான இடதுசாரி அரசாங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த அரசாங்கங்கள் பிராந்தியத்தில் அதன் புவிசார் மூலோபாய ஆர்வத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்பட்ட சதிகளை எதிர்கொண்டன.
பிரேசில் இடதுசாரித் தலைவர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தற்போது அதிபராகப் பதவியேற்றாலும், முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும், அவரது ஆதரவாளர்களும் தங்கள் தோல்வியை ஏற்க தயாராக இல்லை. ஜனவரி 2003 முதல் டிசம்பர் 2010 வரை அதிபராக இருந்த லூலா, 31 அக்டோபர் 2022 அன்று நடந்த தேர்தலில் போல்சனாரோவை தோற்கடித்தார்.
அவர் பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரேசில் நாட்டில் கலவரங்கள் தீவிரமாக வெடித்தன.
பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நாட்டின் தலைநகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை எதிர்க்கும் வகையில், தொடர்ந்தும் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தலைநகரான பிரேசிலியாவில் அரசு கட்டிடங்களை சூறையாடி வருகின்றனர்.
புதிய அதிபராக பதவியேற்ற லூயிஸ் டா சில்வா:
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை எதிர்க்கும் வகையில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவில் உள்ள அரசு கட்டடங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
'பாசிச தாக்குதல்' என்று அழைக்கப்படும் இந்த தாக்குதலில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்ற கட்டடங்களை சேதப்படுத்தினர். அவர்கள் தங்கள் தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருகின்றனர்.
கடும்போக்கு அரசியல்வாதியான முன்னைய அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் வீடுகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அரசாங்க ஆயுதங்களையும் திருடியுள்ளனர்.
தலைநகரில் வன்முறை பரவியதை அடுத்து, போல்சனாரோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ட்வீட்டில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று வலியுறுத்தினார். இதற்கிடையில், சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க தலைநகர் பிரேசிலியாவுக்கு தேசிய காவலர்களை அனுப்ப லூலா அவசரகால அதிகாரத்தை அறிவித்தார்.
அந்நாட்டிலிருந்து, வெளிவரும் பல வீடியோக்களில், போல்சனாரோவின் ஆதரவாளர்களின் பெரும் கூட்டம் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி பிரேசிலிய தேசியக் கொடியில் சூழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். அவர்களை கலைக்க பொலிஸ்துறை புகை குண்டுகளை வீசியது.
பொலிஸ் துறை அதிகாரிகள் குறைந்தது 1500 கலவரக்காரர்களை கைது செய்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் அதிபர் மாளிகையைச் சுற்றியுள்ள சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக கூறினாலும் தொடர்ந்தும் தீவிரமாக பதற்றம் தொடர்கிறது.
தோல்வியை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அதிபர்:
இதற்கிடையே, பொல்சொனாரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, உச்ச நீதிமன்றம் ஆகிய இடங்களுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இடதுசாரி லூயிஸ் டா சில்வா அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதைத் பொல்சொனாரோவின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதிபர் டா சில்வா பதவி விலக வேண்டும் என்றும் இராணுவம் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொல்சொனாரோ ஆதரவாளர்களின் வன்முறை, ஃபாசிச (fascist) வெறிச்செயல் என்று அதிபர் டா சில்வா கூறியுள்ளார். பிரேசில் தலைநகரில் மத்திய அரசின் தலையீட்டுக்கு உத்தரவிட்ட அவர், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கத்துக்குச் சிறப்பு அதிகாரம் தற்போது அளித்துள்ளார்.
முன்னாள் அதிபர் பொல்சொனாரோ தம்முடைய பேச்சின் மூலம் வன்செயல்களை ஊக்குவிப்பதாகத் டா சில்வா குற்றஞ்சாட்டினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (6 ஜனவரி) டா சில்வா பிரேசில் அதிபராகப் பொறுப்பேற்றார். அதற்குச் சற்று முன்னர் பொல்சொனாரோ புளோரிடா (Florida) புறப்பட்டுச் சென்றார். உண்மையில் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றதாகவே கருதுகின்றனர்.
புதிய அதிபர் பதவியேற்கும்போது முன்னைய அதிபர் அவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது பிரேசிலின் வழக்கம். ஆனால் பொல்சொனாரோ அந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் பிரேசிலில் வரலாறு காணாத வன்முறையை அந்நாடு தற்போது கண்டுகொண்டுள்ளது. அமெரிக்காவின் கைப்பிள்ளையே முன்னாள் அதிபரான பொல்சொனாரோ. தற்போது அவர் புளோரிடா புறப்பட்டுச் சென்றிருந்தாலும் உண்மையில் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றதாகவே கருதுகின்றனர்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.