தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் நடந்தது என்ன - சுமந்திரன்!
|2023-01-21 09:35:35|Political|
Page Views: 50
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தேசிய கட்சிகளுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
அத்துடன் மாகாண சபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்துமாறும் கோரியுள்ளார். அதேநேரம், ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவு படுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஐ.பி.சி. தமிழுக்கு கூறினார்.
மீண்டும் நாடு திரும்பினார்
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது பயணத்தை நிறைவு செய்து மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.